ADDED : ஆக 10, 2024 02:35 AM

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, நடுவகளப்பால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 54. இவர், விவசாய தொழிலாளர் சங்கத்தில் இருந்தார். கடந்த 2013ல், பாஸ்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முதல் குற்றவாளியாக மாரிமுத்து சேர்க்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக, பாஸ்கர் - மாரிமுத்து குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்தது. இவ்வழக்கில், மாரிமுத்து ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை, கடைவீதிக்கு சைக்கிளில் வந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், மாரிமுத்துவை சரமாரியாக வெட்டினர்.
படுகாயம் அடைந்த அவரை, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் வழியில் இறந்தார்.
களப்பால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாஸ்கர் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இக்கொலை நடந்து இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், தலைமறைவான, பாஸ்கர் உறவினரான ராகுல், 24 மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடுகின்றனர்.

