/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மருத்துவமனையில் ரகளை போதையில் இருந்தவர் கைது
/
மருத்துவமனையில் ரகளை போதையில் இருந்தவர் கைது
ADDED : மே 01, 2024 01:18 AM

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனையில் புகுந்த வடிவேலு, 42, என்ற நபர், மருத்துவமனையில் இருந்த இருக்கைகளை துாக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார்; நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தி கூச்சலிட்டார்.
மருத்துவமனை பகுதியில் ஓடி, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை மிரட்டினார். அங்கிருந்தவர்கள் அச்சமடைந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர், மன்னார்குடி விளக்காரத் தெருவைச் சேர்ந்த வடிவேலு, என்பது தெரிந்தது.
சற்று, மனநிலை சரியில்லாத அவர், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார் வழக்கு பதிந்து, அந்த நபரை கைது செய்தனர். பின், அவரை, மனநல பரிசோதனைக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.