sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா

/

ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா

ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா

ஆலங்குடி கோவிலில் குருபெயர்ச்சி விழா


UPDATED : மே 02, 2024 02:40 AM

ADDED : மே 02, 2024 02:31 AM

Google News

UPDATED : மே 02, 2024 02:40 AM ADDED : மே 02, 2024 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனிசன்னிதியில், குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில், நவகிரக தலங்களில் ஒன்றாகவும், குருபகவான், பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது, இக்கோவிலில், குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பு குருபெயர்ச்சியை ஒட்டி, கடந்த வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை விழா துவங்கியது.

இதை முன்னிட்டு, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், குருபகவான், உற்சவ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

நேற்று மாலை, 5:19 மணிக்கு, மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.

இதை ஒட்டி, குருபகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள், குருபகவானைவழிபட்டனர்.

வசிஷ்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்@

@

தஞ்சாவூர் மாவட்டம் தென்திட்டை கோவில் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். குருபகவான் நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 5:19 மணிக்கு குரு பெயர்ச்சியடைந்தார். முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் காட்சியளித்த குருபகவானுக்கு தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 7 மற்றும் 8ம் தேதிகளில் பரிகாரஹோமமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள்செய்திருந்தனர்.

பட்டமங்கலம்


குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்து தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கள் ராசி, நடத்திரத்திற்கு அர்ச்சனை செய்தனர். மூலவர் சந்தனக்காப்பு, புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார். உற்சவர் 6 கார்த்திகை பெண்கள், 4 முனிவர்களுடன் கூடிய கற்பக விருட்சத்தில் எழுந்தருளினார். கோயில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us