/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
தட்டுப்பாடு இன்றி விதைநெல் வழங்க தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

ADDED : செப் 05, 2024 08:39 PM
திருவாரூர்:''சம்பா சாகுபடிக்கு, தட்டுப்பாடு இன்றி,விதைநெல் வழங்க வேண்டும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம்,திருத்துறைப்பூண்டியில்,நேற்று, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு,கர்நாடக அரசு வழங்க வேண்டிய உரிமை நீரை,உரிய நேரத்தில் வழங்காததால், மேட்டூர் அணை, ஜூன் 12ம் தேதிக்கு பின், காலதாமதமாக திறக்கப்பட்டது. இதனால், 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது நிலத்தை, சம்பா சாகுபடி செய்ய கோடை உழவு செய்து நேரடி விதைப்புக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில்,சம்பா விதை நெல்லுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் கடைகளில், கூடுதல் விலை கொடுத்து, விதைநெல் வாங்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு, மானிய விலையில், அரசு வேளாண்மை கிடங்குகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம், விதை நெல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு,முத்தரசன் கூறினார்.
*********************