/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு
/
பெட்ரோல் பங்க்கில் ரூ.40,000 பறிப்பு
ADDED : மார் 10, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஊத்துக்காட்டில், தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, பெட்ரோல் போடுவது போல டூ--வீலரில் வந்த இரு வாலிபர்கள், ஊழியர்களிடம், அரிவாளை காட்டி மிரட்டி, 40,000 ரூபாயை பறித்து தப்பினார்.
விசாரித்ததில், தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரம் அருகில் உள்ள, பழையார் கிராமத்தைச் சேர்ந்த வினோத், 25, மற்றும் 17 வயது சிறுவன் என, தெரிந்தது. இருவரையும் கைது செய்த வலங்கைமான் போலீசார், 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.