/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் கைது
/
ரூ.40,000 லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் கைது
ADDED : ஜூன் 21, 2024 12:51 AM
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர், சிவதாஸ். ஆலங்கோட்டையில், டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றுகிறார். உடல்நிலை சரியில்லாததால், திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம் சந்தர், 56, என்பவரிடம், திருத்துறைப்பூண்டிக்கு பணிமாறுதல் கேட்டார். அதற்கு அவர், 1.10 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 70,000 ரூபாயை சிவதாஸ் கொடுத்தாக கூறப்படுகிறது.
தொகையை குறைத்து வாங்க முடியாது என கறார் காட்டிய மேலாளர் சக்தி பிரேம்சந்தரால், மனம் உடைந்த சிவதாஸ், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் பற்றி புகார் செய்தார்.
அதன்படி, நேற்று மதியம் டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், மேலாளரிடம், ரசாயன பவுடர் தடவிய, 40,0000 ரூபாயை சிவதாஸ் கொடுத்தார். அதை, அலுவலக உதவியாளர் சரவணன், 42, வாங்கினார். மறைந்திருந்த போலீசார், சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பணத்தை பெற்றுக் கொள்ளும்படி மேலாளர் கூறியதால் வாங்கினேன் என, அவர் கூறினார். இதையடுத்து, மேலாளர் சக்தி பிரேம் சந்தரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.