/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
அ.தி.மு.க., பிரமுகர் மகனை அடித்து கொன்ற இருவர் கைது
/
அ.தி.மு.க., பிரமுகர் மகனை அடித்து கொன்ற இருவர் கைது
அ.தி.மு.க., பிரமுகர் மகனை அடித்து கொன்ற இருவர் கைது
அ.தி.மு.க., பிரமுகர் மகனை அடித்து கொன்ற இருவர் கைது
ADDED : செப் 02, 2024 03:55 AM

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்; அ.தி.மு.க., வார்டு செயலர். இவரது மகன் ஜெயநாராயணன், 38. இவர், ஈரோட்டில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார்.
ஐந்து நாட்களுக்கு முன், மன்னார்குடி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், இரவு நேர கடையில் இட்லி சாப்பிட்டுள்ளார்.
அதே கடையில், நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த பஷிர் முகமது, 34, நம்பிராஜன், 30, ஆகிய இருவரும் சாப்பிட்டுஉள்ளனர்.
அப்போது, ஜெயநாராயணனை, பஷிர்முகமது தரக்குறைவாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த ஜெயநாராயணன், பஷிர்முகமதுவை தாக்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
வீட்டிற்கு ஜெயநாராயணன் நடந்து சென்ற போது, பின்னால் வந்த பஷிர்முகமது, நம்பிராஜன் கட்டை மற்றும் கற்களால் தாக்கி, ஜெயநாராயணனை கொலை செய்தனர்.
மன்னார்குடி போலீசார் பஷிர்முகமது, நம்பிராஜனை கைது செய்தனர்.