ADDED : அக் 12, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே, புனவாசல் கிளியனுாரை சேர்ந்தவர்கள், சுக்குறு, 70, துளசிதாஸ், 45, அம்பிகாபதி, 55, ராஜா, 54, மாரியப்பன், 56, கோவிந்தராஜ், 65. இவர்களது, வீடுகளுக்கு அருகில் பனைமரம் ஒன்று உள்ளது.
நேற்று காலை, இவர்கள் ஆறு பேரும், வீடுகளில் இருந்து வெளியில் வரும் போது, பனைமரத்தில் இருந்த கதண்டுகள், இவர்களை கடித்துள்ளது. மயக்கமடைந்த ஆறு பேரும், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கூத்தாநல்லுார் தீயணைப்பு துறையினர், பனைமரத்தில் இருந்த கதண்டுகளை அழித்தனர்.