/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
'டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்'
/
'டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்'
ADDED : அக் 19, 2024 03:04 AM

திருவாரூர்:திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டி:
டெல்டாவில், புதிய தொழிற்சாலைகள் வர வேண்டாம் என எந்த தரப்புமே சொல்லவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விவசாய விளை பொருட்களுக்கு, மதிப்பு கூட்டுதல் செய்தால், விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தொழில் முதலீட்டிற்காக வெளிநாட்டிற்கு சென்று வந்த பின், மொத்தமாக மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தாண்டியுள்ளோம். இதில், 31 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. விரைவில், 10 லட்சம் கோடி ரூபாய் தாண்டிய புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார். படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு, குறைந்தபட்ச ஊதியமாக, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
டெல்டாவில், விவசாயம் சார்ந்த தொழில்களை நிச்சயம் கொண்டு வருவோம். விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையிலான திட்டங்களை முதல்வர் உருவாக்கி வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும்.
இவ்வாறு கூறினார்.