/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறி திருவாரூரில் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
/
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறி திருவாரூரில் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறி திருவாரூரில் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக கூறி திருவாரூரில் கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 30, 2024 11:40 PM

திருவாரூர்: திருவாரூர், திரு.வி.க., கல்லுாரியில், மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து இருப்பதாக கூறி, அவருக்கு நியாயம் கேட்டு நேற்று, கல்லுாரி மாணவ - மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூரில், திரு.வி.க., அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியல், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரியில், பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக, சில தினங்களுக்கு முன், ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து, கல்லுாரியில் தற்காலிகமாக பணியில் இருந்த ஊழியர் ஒருவர் பணி யில் இருந்து நீக்கப்பட்டார்.
நடவடிக்கை
இந்நிலையில், ஜூலை மாதம், இக்கல்லுாரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், உடல்நிலையில்,அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது என, பெற்றோருடன் கல்லுாரிக்கு வந்து, மாற்று சான்றிதழை வாங்கி சென்றுவிட்டார்.
அந்த மாணவி, சேலத்தை சேர்ந்தவர். கபடி விளையாட்டிற்கான ஒதுக்கீட்டில் சேர்ந்து படித்து வந்துள்ளார். தற்போது, வேறு கல்லுாரியில் படித்து வருகிறார்.
இந்த மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் நடந்து இருக்கலாம் எனக் கருதி, கல்லுாரி மாணவ - மாணவியர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவிக்கு நியாயம் கேட்டும் மாணவர்கள் பேசினர்.
மாணவர்கள் தரப்பில் கூறுகையில், 'குற்றச்சாட்டுக்கு ஆளான, தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கல்லுாரிக்கு, பெண் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்லுாரி நிர்வாகம், இந்த சம்பவத்தை மூடி மறைக்க பார்க்கிறது' என்றனர்.
போலீஸ் தரப்பில் கூறுகையில், 'மாணவியர் தரப்பில் இருந்து, எந்த புகாரும் வரவில்லை. சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரித்ததில், அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்கிறார். மாணவி தரப்பில் புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
நீக்கிவிட்டோம்
கல்லுாரி பொறுப்பு முதல்வர் ராஜாராமன் கூறியதாவது:
மாணவி ஒருவர், கடந்த ஜூலை மாதம், பெற்றோருடன் வந்து மாற்று சான்றிதழை வாங்கி சென்றுவிட்டார். ஏதேனும், குறை இருப்பின் தெரிவிக்கும்படி கேட்டோம்; ஒன்றும் இல்லை என, தெரிவித்தார்.
சிலர் திட்டமிட்டு, தவறான தகவலை பரப்புகின்றனர். கல்லுாரியிலும், மாணவி தரப்பில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆடியோ வெளியானதையடுத்து, கல்லுாரியில் இருந்து, தற்காலிகமாக பணிபுரிந்த ஆசிரியரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்றார்.