/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
விபத்தில் மேஸ்திரி பலி தி.பூண்டி அருகே மறியல்
/
விபத்தில் மேஸ்திரி பலி தி.பூண்டி அருகே மறியல்
ADDED : செப் 09, 2011 01:54 AM
திருத்துறைப்பூண்டி: 'திருத்துறைப்பூண்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி,
செங்கல் சூளை மேஸ்திரி மோதி இறந்தார்.
வாகனத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்'
என பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் மூன்று மணி நேரம் போக்குவரத்து
ஸ்தம்பித்தது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடியை சேர்ந்தவர்
கண்ணையன் (55). இப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் மேஸ்திரியாக
பணிபுரிந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து, மணலியில் இருந்து
கரும்பியூர் சைக்கிளில் சென்றார். இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத
வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடையாளம் தெரியாத வாகனத்தை
கண்டறியக்கோரி, கிராம மக்கள், திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலை
ஆலத்தம்பாடியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர்
செந்தில்முருகன், ஆலிவலம் போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகம் மக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். 'உடனடியாக வாகனத்தை கண்டறிந்து, நடவடிக்கை
எடுக்கப்படும்' என்று உறுதியளித்தனர். அதன்பேரில், இரவு 10 மணியளவில்
சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால், திருத்துறைப்பூண்டி- திருவாரூர்
சாலையில் மூன்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.