ADDED : பிப் 14, 2026 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், பாலாக்குடியை சேர்ந்தவர் சந்தோஷ், 46. இவர், மின்வாரிய உதவியாளராக பணி செய்தார். இந்நிலையில், பெருமாளகரத்தில், டிரான்ஸ்பார்மரில் ஏறி, பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி, இறந்தார்.
உறவினர்கள், சந்தோஷ் சடலத்துடன், கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் திரண்டு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி, மறியலில் ஈடுபட்டனர். கொரடாச்சேரி போலீசார் பேச்சு நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.

