ADDED : நவ 16, 2024 02:33 AM
மன்னார்குடி:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, மந்தக்கார மூன்றாம் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார், 60. இவரது மனைவி பரமேஸ்வரி, 51. இவர்களது மகள் அருணா, 21. அசோக்குமார் கூலி வேலை பார்த்து வந்தார். அசோக்குமாருக்கு, சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் வரை, இவர்களின் வீடு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்தபோது, மூன்று பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், எலி பேஸ்ட் எனும் எலி கொல்லி மருந்து சாப்பிட்டதில் அருணா இறந்தது தெரிந்தது.
தம்பதியை போலீசார் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், அசோக்குமார் இறந்தார். பரமேஸ்வரி தீவிர சிகிச்சையில் உள்ளார்.
