/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
சொத்து தகராறில் ஆத்திரம் மகனை கொன்ற தந்தை சரண்
/
சொத்து தகராறில் ஆத்திரம் மகனை கொன்ற தந்தை சரண்
ADDED : மே 09, 2025 02:53 AM

மன்னார்குடி:மன்னார்குடி அருகே சொத்து தகராறில் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை, கோர்ட்டில் சரணடைந்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் அடுத்த, சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 58. இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் அரவிந்த் மோகன் ஒப்பந்ததாரர். இவருக்கு, மனைவி, 8 மாத பெண் குழந்தை உள்ளனர்.
குடும்ப சொத்து தொடர்பாக, பாலு, அரவிந்த்மோகன் இடையே பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, சொத்து குறித்து தந்தையிடம், மகன் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாலு, மகனை, கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அரவிந்த்மோகன், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து, பாலுவை தேடினர். திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் பாலு சரணடைந்தார்.