/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
லாரி கவிழ்ந்து ஜல்லியில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி
/
லாரி கவிழ்ந்து ஜல்லியில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி
லாரி கவிழ்ந்து ஜல்லியில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி
லாரி கவிழ்ந்து ஜல்லியில் சிக்கி தந்தை, மகன், மகள் பலி
ADDED : ஏப் 11, 2025 01:31 AM

பேரளம்:லாரி கவிழ்ந்து, அதில் இருந்து கொட்டிய ஜல்லிக்கற்களில் சிக்கிய தந்தை, மகன், மகள் பரிதாபமாக பலியாகினர்.
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம், வரகூரைச் சேர்ந்தவர் மோகன், 35; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிருந்தா, 32. இவர்கள் மகன் நிரோஷன், 7, மகள் சியாஷினி, 4. நேற்று காலை, தந்தை, மகன், மகள் மூவரும், கோவில் திருமணத்திற்கு சென்று, டூ - வீலரில் வரகூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அகர திருமாளத்தில் இருந்து வரகூருக்கு திரும்பியபோது, பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி, டூ -- வீலரை கண்டதும், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
அப்போது லாரியில் இருந்த ஜல்லிக்கற்கள் கொட்டியதில், டூ - வீலரில் சென்ற தந்தை, மகன், மகள் மூவரும் ஜல்லிக் கற்களுக்கு அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். பேரளம் போலீசார், மூவர் உடல்களையும் கைப்பற்றினர். திருவாரூர் எஸ்.பி., கருண் கரட் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். தலைமறைவான லாரி டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.