sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

ராஜகோபால ஸ்வாமி கோவிலில்மீண்டும் "விஸ்வரூப தரிசனம்'

/

ராஜகோபால ஸ்வாமி கோவிலில்மீண்டும் "விஸ்வரூப தரிசனம்'

ராஜகோபால ஸ்வாமி கோவிலில்மீண்டும் "விஸ்வரூப தரிசனம்'

ராஜகோபால ஸ்வாமி கோவிலில்மீண்டும் "விஸ்வரூப தரிசனம்'


ADDED : ஆக 03, 2011 12:08 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னார்குடி: மன்னை ராஜாகோபால ஸ்வாமி கோவில் விஸ்வரூப தரிசன கைங்கர்ய சபா குழுவெளியிட்ட அறிக்கை:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலஸ்வாமி - செங்கமலத்தாயார் கோவில் உள்ளது.

இந்த கோவி ல் பல நூற்றாண்டாக அருளுக்கும், பொருளுக்கும் அதிபதியாகவும், கருணைக்கடலாக காக்கும் தெய்வமாக, கல்யாண குணங்கள் அனைத்தும் உடையவராகவுள்ள எம்பெருமான், அன்பர்களை காத்தருளும் பொ ருட்டும் ஸ்ரீராஜகோபாலன் என்னும் திருநாமத்துடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.தட்சிணத்துவாரகை செம்பகாரண்ய ஷேத்ரம் என்று சொல்லப்படும ராஜகோபால ஸ்வாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. சைவ புலவர்களால் பாடல் பெறற திருத்தலமான இக்கோவில் சுமார் 24 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.இத்திருக்கோவிலில் மூன்று மதில்கள், 16 கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், பள்ளியறை ஆகியன உள்ளது. இக்கோவிலின் தெப்பக்குளம் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு, மன்னார்குடி மதில் அழகு என்று இக்கோவிலை வர்ணிப்பர். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 18 நாட்கள் திருவிழா நடக்கிறது.இத்திருத்தலத்தில் மீண்டும் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்று வருகிறது. யானை, காராம்பசு, குதிரை, மேளதாள முழக்கங்களுடன் விஸ்வரூப தரிசனம் விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று அருள் பெற வேண்டும்.






      Dinamalar
      Follow us