/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி
/
மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி
ADDED : ஜன 24, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி; இறந்துவிட்டார்.
இவரது மனைவி ராஜலட்சுமி, 58. மகன் பிரசன்னா, 32; எலக்ட்ரீஷியன். இவரது சகோதரி மஞ்சுபிரியா, 36.
இவர், குடவாசலில் டெய்லர் கடையில் வேலை பார்க்கிறார். இவர்களின் வீட்டில் ஒயரிங் வேலை நடக்கிறது. ஒயர்கள் ஆங்காங்கே தொங்கியவாறு இருந்தன.
கடந்த, 21ம் தேதி மஞ்சுபிரியா வேலைக்கு சென்றார். அன்று மாலை வீடு திரும்பியவர், தாய் ராஜலட்சுமியும், தம்பி பிரசன்னாவும் வீட்டின் சுவற்றில் சாய்ந்த நிலையில், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததை பார்த்த மஞ்சுபிரியா அதிர்ச்சி அடைந்தார். கொரடாச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.