ADDED : டிச 30, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, லாரி மோதி மத போதகர் பலியானார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, மாணிக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், சந்தோஷ்ராஜன், 52, கிறிஸ்துவ மதபோதகர். இவரது மகள் லென்சிபிளசி, 22. இருவரும்,நேற்று, டூ - வீலரில், தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சாமந்தான் காவிரி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே, கரூரில் இருந்து, திருவாரூர் நோக்கி வந்த லாரி மோதியதில், டூ - வீலரில் சென்ற சந்தோஷ்ராஜன், அதே இடத்தில் இறந்தார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.
நீடாமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

