ADDED : ஜூலை 21, 2026 02:41 AM
திருவாரூர்: கோட்டூர் அருகே, கீழ பள்ளிச்சந்தத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 25. 'ஏசி' மெக்கானிக். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணை, ஜூலை 17ல் வெளியூர் அழைத்து சென்று, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். திருத்துறைப்பூண்டி போலீசார், போக்சோவில் செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர்: திருவிடைமருதுாரைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணும், மணல்மேடு சரவணன், 25, என்பவரும் காதலித்தனர். சில நாட்களாக சரவணனுடன் பேசுவ தை இளம்பெண் தவிர்த்த நிலையில், தன்னை திருமணம் செய்யக்கோரி சரவணன் மிரட்டல் விடுத்தார். போலீசார், சரவணனை போக் சோவில் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே, குருவாடியைச் சேர்ந்தவர் அஜய், 19. இவர், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' மூலம், புதுக்கோட்டை மாவட்டம், புல்லான்விடுதியைச் சேர்ந்த, 15 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். நன்னிலம் போலீசார், அஜயை போக்சோவில் கைது செய்தனர்.
தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சேர்ந்த, 16 வயது இளம்பெண்ணும், ஏரகரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது வாலிபரும் நெருங்கி பழகியதில், இளம்பெண் மூன்று மாதம் கர்ப்பமானார். கும்பகோணம் போலீசார், வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.
திருநெல்வேலி: தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பிளஸ் -1 படிக்கும், 16 வயது மாணவியுடன், துாத்துக்குடி மாவட்டம், அயிரவன்பட்டியைச் சேர்ந்த பாலன், 19, என்பவர் பழகினார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை பாலன் பலாத்காரம் செய்தார். தாழையூத்து போலீசார், பாலனை போக்சோவில் கைது செய்தனர்.
