/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
'திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் மரியாதை செய்ததில் தவறு இல்லை'
/
'திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் மரியாதை செய்ததில் தவறு இல்லை'
'திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் மரியாதை செய்ததில் தவறு இல்லை'
'திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் மரியாதை செய்ததில் தவறு இல்லை'
ADDED : ஜன 17, 2025 02:44 AM
மன்னார்குடி:''காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்திற்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செய்ததில் தவறு இல்லை,'' என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில், கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொண்டார். இது, முற்றிலும் தவறான போக்கு மற்றும் கண்டிக்கத்தக்கது.
பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்து கொண்டு, மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக, ஹிந்து மதம் நம்பும் சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது.
சனாதனத்தை கண்டிப்பதற்காகவே, தன்னை கிறிஸ்தவன் என, துணை முதல்வர் கூறிக் கொள்வது போல தெரிகிறது. அமைச்சர்கள் எந்த மதமாக இருந்தாலும் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து, தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
கவர்னர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்தவாறு உள்ள, திருவள்ளுவர் படத்துக்கு, திருவள்ளுவர் தினத்தன்று மரியாதை செய்தது தவறில்லை. காவி நிறம் என்பது தியாகத்தின் அடையாளம். கவர்னர், திருவள்ளுவரை ஒரு தியாகியாக பார்க்கிறார்.
திருவள்ளுவரை பொறுத்தவரை, அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். ஈ.வெ.ராமசாமி ஒரு நாஸ்திகவாதி. அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் வழக்கத்தை அவரது தொண்டர்கள் கடைபிடிக்கின்றனர். அதே போல, அரசும் கடைபிடிக்கிறது. இது முரண்பாடாக தெரியவில்லையா?
கவர்னரை, குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, இது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன.
இவ்வாறு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறினார்.