ADDED : செப் 14, 2011 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் யூனியன் குழு கூட்டம் யூனியன் தலைவர் தமிழ்ச்செல்விராஜா தலைமையில் நடந்தது.
இதில் துணைத்தலைவர் செல்வராஜன், கமிஷனர் ராஜேந்திரன், பொறியாளர்கள் துரை, அன்பழகன், மேலாளர் ராஜேந்திரன், சத்துணவு மேலாளர் விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, கார்த்திகேயன், ராஜ்குமார், கவுன்சிலர்கள் அப்துல்லா, சிங்காரவேலு, ஞானசேகரன், பாஸ்கரன், சிரோன்மணி, லதா, கோவிந்தராசு, வாசுகி, சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டசபையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியதுக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.