sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

தி.மு.க., மா.செ., மீது புகார் அளித்த கம்யூ., பிரமுகர் மீது பெண் புகார்

/

தி.மு.க., மா.செ., மீது புகார் அளித்த கம்யூ., பிரமுகர் மீது பெண் புகார்

தி.மு.க., மா.செ., மீது புகார் அளித்த கம்யூ., பிரமுகர் மீது பெண் புகார்

தி.மு.க., மா.செ., மீது புகார் அளித்த கம்யூ., பிரமுகர் மீது பெண் புகார்


ADDED : ஆக 12, 2011 01:26 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: 'திருவாரூர் அருகே வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்யாமல், தற்போது அந்த வீடு தனக்கு சொந்தமானது என்று கூறுகிறார்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் முகமது ரபீக் மீது போலீஸ் எஸ்.பி.,யிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் அருகே அத்திக்கடை வடக்கு தெருவில் வசித்து வருபவர் அப்துல் அமீது மனைவி ஐசாநாச்சியார். இவர் திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: அத்திக்கடை நூரியா தெருவில் எனக்குச் சொந்தமான வீட்டில், முகம்மது ரபீக் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ஜனவரி 2009ம் ஆண்டு முதல் வாடகை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, 'வீடு எனக்கு சொந்தமாகி விட்டது' என்று கூறி அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என் வீட்டை மீட்டுத்தரவும். இவ்வாறு புகார் மனுவில் ஐசாநாச்சியார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட எஸ்.பி., சேவியர் தன்ராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முகம்மது ரபீக் கடந்த ஆறாம் தேதி தனக்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலத்தை, தி.மு.க., மாவட்ட செயலாளர் கலைவாணன் மற்றும் அவரது சகோதரர் கலையரசன் ஆகியே இருவரும் அபகரித்துக் கொண்டதாக எஸ்.பி.,யிடம் புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us