நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன்னார்குடி: மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள சட்டிபடுகை அருகே ரோட்டில் நடந்து சென்ற விதவை பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சட்டிபடுகையை சேர்ந்தவர் லெட்சுமி (60). விதவை. நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் பொருட்கள் வாங்குவதுக்காக ரோட்டில் நடந்து சென்ற போது மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலத்தை நோக்கி சென்ற லாரி மோதியதில் தலை நசுங்கி இறந்தார். நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கிறார்.