/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை
/
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை
சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண்ணிற்கு 54 ஆண்டு சிறை
ADDED : நவ 07, 2025 02:19 AM

திருவாரூர்: நன்னிலம் அருகே, 10ம் வகுப்பு படித்த சிறுவனுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த பால்வாடி சமையல் பெண் ஊழியருக்கு, 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, எரவாஞ்சேரி அடுத்த, தேதியூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
இவரது மனைவி, லலிதா, 38. இவர், வடுகர்பாளையம் பால்வாடி மையத்தில் சமையலராக பணிபுரிந்தார்.
இவர், தேதியூர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த சிறுவனை, 2021, அக்., 26ல், 'டான்ஸ்' கற்று தருவதாக கூறி, பல ஊர்களுக்கு, அழைத்து சென்றார்.
இவர் அழைத்து சென்றது தெரியாமல், எரவாஞ்சேரி போலீசில், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுவனை, போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுவனை பல ஊர்களுக்கு லலிதா அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்த நிலையில், லலிதாவை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து, லலிதாவிற்கு, 54 ஆண்டு கள் சிறை தண்டனை, 18,000 ரூபாய் அபராதம் விதித்து, உத்தரவிட்டார்.

