/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கார் சாகுபடி பாதிப்பை நீக்க தண்ணீர் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்
/
கார் சாகுபடி பாதிப்பை நீக்க தண்ணீர் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்
கார் சாகுபடி பாதிப்பை நீக்க தண்ணீர் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்
கார் சாகுபடி பாதிப்பை நீக்க தண்ணீர் விநியோக முறையை சீர்படுத்த வேண்டும்
ADDED : ஜூலை 12, 2011 12:26 AM
ஸ்ரீவைகுண்டம் : தாமிரபரணி பாசனத்தில் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் தண்ணீர் விநியோக முறையில் உள்ள குறைபாட்டை நீக்கி தூத்துக்குடி மாவட்ட அட்வான்ஸ் கார் ரெகுலர் கார் சாகுபடியில் உள்ள பாதிப்பை நீக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தாமிரபரணி பாசனத்தில் பாபநாசம் நீர்தேக்கத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் நாற்பத்து ஆறாயிரத்து நூற்று ஏழு ஆக மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பிசானம், கார் பருவம் என இருபோக சாகுபடி உரிமை பெற்றவையாகும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ குரூப் நஞ்சைகள் என அங்கீகாரம் பெற்ற ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பகுதியில் ஆறுமுகமங்கலம் குளம் இரண்டாயிரத்து முப்பத்து ஒன்பது ஏக்கர் வடகால் 1 மற்றும் 3ம் நம்பர் மடை பாசனம் ஆயிரத்து 691 ஏக்கர் தென்காலைச் சேர்ந்த கடம்பாகுளம் இரண்டாயிரத்து 172 ஏக்கர் ஆத்தூர்குளம் 2 ஆயிரத்து 222 ஏக்கர் ஆகியவற்றுக்கு 8 ஆயிரத்து 124 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு அட்வான்ஸ் கார் சாகுபடி என்ற உரிமையும் உண்டு. இப்படி பிசானம் கார் முன் கார் சாகுபடி என்ற உரிமைகள் தாமிரபரணி பாசனத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்தே வந்துள்ளது. இந்நிலையில் 8 ஆயிரத்து 124 ஏக்கர்களாக இருந்த முன்கார் சாகுபடி உரிமையை ஸ்ரீவைகுண்டம் அணை வடகாலில் 9 ஆயிரத்து 828.32 ஏக்கராகவும் ஆகமொத்தம் 21 ஆயிரத்து 113.54 ஏக்கர்களாக கூட்டி 1969ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி எம்எஸ்.நம்பர் 2011ன் படி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அறிவித்து இதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாபநாசம் அணையில் மார்ச் மாதம் முடிய இருப்பு தண்ணீர் 500 மில்லியன் கனஅடிபோக மீதி தண்ணீரையும் மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு கீழே உள்ள தண்ணீரையும் முன்கார் சாகுபடிக்கு வழங்க வேண்டும் என்பது தாமிரபரணி, மணிமுத்தாறு பாசன சிஸ்டமாகும். அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதால் அப்பகுதிகளுக்கு ரெகுலர் கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட மாட்டாது என்றும் 1977ல் அரசு வெளியிட்ட கடித எண் ஏ2/10361/77 (எப்பி) தேதி 30.9.1977 கடித அறிவிப்பு கூறுகிறது.
2011ம் ஆண்டிற்கு முன்கார் சாகுபடி 8 ஆயிரத்து 124 ஏக்கர்களுக்கு மட்டுமே பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த 8 ஆயிரத்து 124 ஏக்கர்களுக்கு ஜூலை மாதம் 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறையின் நீர் விநியோக குளறுபடியால் முன்கார் சாகுபடி பகுதியான ஆறுமுகமங்கலம் குளம், ஆத்தூர்குளம், கடம்பாகுளம் பகுதிகள் முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நஞ்சை நிலங்கள் அனைத்தும் தரிசாக கிடக்கின்றது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 2011ம் ஆண்டிற்கு கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 40 ஆயிரம் ஏக்கர்களுக்கும் அனுமதித்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாபநாசம் அணையில் 43.60 அடியும் சேர்வலாறு அணையில் 67.35 அடியும் இருக்கிற தண்ணீர் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட சாகுபடிக்கே உரிமையான மணிமுத்தாறு அணையில் 56.32 அடி தண்ணீரும் உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள முன்கார் சாகுடி நிலங்களும் கார் சாகுபடிக்கு அனுமதி இல்லாமல் தரிசாக கிடக்கும் நிலங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து உரிமையை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தனது மனுவில் கூறியுள்ளார்.