/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றவர்களைசொந்த மாவட்டத்தில் பதிய வசதி செய்ய வேண்டும்
/
முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றவர்களைசொந்த மாவட்டத்தில் பதிய வசதி செய்ய வேண்டும்
முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றவர்களைசொந்த மாவட்டத்தில் பதிய வசதி செய்ய வேண்டும்
முதுகலை கல்வியியல் பட்டம் பெற்றவர்களைசொந்த மாவட்டத்தில் பதிய வசதி செய்ய வேண்டும்
ADDED : ஜூலை 13, 2011 02:44 AM
தூத்துக்குடி: முதுகலை பட்டம் மற்றும் முதுகலை கல்வியியல் பட்டம்
முடித்தவர்களை சொந்த மாவட்டத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்
என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்க
கோரிக்கை முனு அனுப்பியுள்ளனர்.முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை
மனுவில் தெரிவித்துள்ளதாவது; மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன் அரசு
ஊழியர்களுக்கு பெண்களுக்கு 6 மாத கால மகப்பேரு விடுப்பு வழங்கியதற்கு
நன்றியை தெரிவித்துகொள்கிறோம். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்ய ஆன்லைனில் அவரவர் பள்ளிகளில்
மூலம் பதிவு செய்யவதால் பல லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர். மேலும் 20
நாள் வரை பதிவு செய்யும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே பதிவு மூப்பு நாள்
என்பதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகலை பட்டம் மற்றும் முதுகலை
கல்வியியல் பட்டம்( எம்எட்) முடித்த மாணவர்கள் பதிவு செய்வதாக இருந்தால்
மதுரைக்கு சென்றுதான் வேலைவாய்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. சொந்த
மாவட்டத்தில் பதிவு செய்ய முடியாத நிலைமை தற்போது இருந்து வருகிறது.
இன்ஜினியரிங் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் பதிவை சொந்த மாவட்டத்தில்
பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு
நன்றி தெரிவித்துகொள்கிறோம். முதுகலை பட்டம் முடித்தவர்கள் பயன்பெறும்
வகையில் தேவையில்லாமல் அலைச்சலை குறைக்கும் வகையில், பணச்செலவை
குறைப்பதற்கும், அதுவும் பெண்கள் என்றால் அவர்களுடன் துணைக்கு ஒருவரை
மதுரைக்கு அழைத்து செல்லவேண்டிய நிலை இருப்பதால் தங்கள் சொந்த
மாவட்டத்திலேயே முதுகலை பட்டத்தை பதிவு செய்து கொள்ள தமிழக முதல்வர் தமிழக
வேலைவாய்ப்பு துறைக்கு அரசு ஆணை பிறப்பித்து உத்தரவு வழங்க
கேட்டுக்கொள்கிறோம்.
இன்னும் ஒரு சில மாதங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி
மற்றும் பிஎட்., தேர்வு முடிவுகள் வெளிவர உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவியர் அனைவரும் தேர்வு மதிப்பெண் பட்டியல் கிடைத்ததும் வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் இரவோடு இரவாக சென்று வரிசையில் காத்திருப்பார்கள்.
பதிவு மூப்பு முதலில் கிடைத்துவிடும் என்று நினைத்து காலை 10 மணிக்கு பதிவு
செய்வதற்காக முதல்நாள் இரவே தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்ய காத்திருப்பார்கள். பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி.,
மாணர்களை போல் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பிஎட்., மாணவர்களின் பதிவு
மூப்பை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வரவேண்டும். தேர்வு
முடிவுகள் வெளிவந்து 20 நாள் வரை ஒரே பதிவு மூப்பு என்ற அரசுக்கு ஆணை
பிறப்பிக்க வேண்டும் . இவ்வாறு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்
தெரிவித்துள்ளனர்.

