sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா :வரும் 29ம் தேதி அசன பண்டிகை

/

கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா :வரும் 29ம் தேதி அசன பண்டிகை

கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா :வரும் 29ம் தேதி அசன பண்டிகை

கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா :வரும் 29ம் தேதி அசன பண்டிகை


ADDED : செப் 25, 2011 12:45 AM

Google News

ADDED : செப் 25, 2011 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் முப்பெரும் விழா துவங்கியது.

வரும் 29ம் தேதி அசன பண்டிகையை முன்னிட்டு அதிகாலை நடக்கும் பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் கலந்து கொண்டு செய்தி கொடுக்கிறார். கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தின் அசனப்பண்கை விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி நடக்கும். இதைப் போல இந்தாண்டிற்கான அசனபண்டிகை விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் பஜனைப் பிரசங்கம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை உபவாசக் கூட்டமும், மாலை கன்வென்ஷன் நடந்தது. இன்று காலை 9 மணி அளவில் துதிஆராதனை நடக்கிறது. இதில் சென்னையை சேர்ந்த பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் கலந்து கொண்டு தேவ செய்தி கொடுக்கிறார். அன்று மாலை 7 மணி அளவில் கன்வென்ஷன் கூட்டம் நடக்கிறது. வரும் 26ம் தேதி தூத்துக்குடி இயேசுவின் அக்கினி ஊழியர்கள் கார்த்திக், கமாலியேல் ஆகியோர்கள் கன்வென்ஷன் கூட்டம் நடக்கிறது. வரும் 27ம் தேதி மாலை 7 மணி அளவில் பஜனைப் பிரசங்கம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி மாலை 7 மணியளவில் பண்டிகை ஆயத்த ஆராதனை நடக்கிறது. வரும் 29ம் தேதி உயரழுத்த ஜெனரேட்டர் பிரதிஷ்டை மற்றும் தேவாலய பிரதிஷ்டை, 87வது அசன பண்டிகை ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. இதில் அன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜெனரேட்டர் பிரதிஷ்டை மற்றும் பண்டிகை ஆராதனை திருவிருந்து ஆராதனை நடக்கிறது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் தேவசெய்தி கொடுக்கின்றார்.அன்று மாலை 4 மணியளவில் ஞானஸ்நான ஆராதனையும், மாலை 5 மணியளவில் அசனவிருந்தும் நடக்கிறது. இதில் சபை மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அன்று இரவு 10 மணியளவில் ஸ்தோத்திர ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சேகரகுரு ஆபிரகாம் பீட்டர், சபை ஊழியர் வேதநாயகம் மற்றும் சபை மக்கள் உட்பட பலர் செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us