sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப்புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

/

தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப்புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப்புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப்புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


ADDED : ஜூலை 13, 2011 02:43 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி:தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தூத்துக்குடி அழகர் மஹாலில் நடந்த லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஐபிடிஜி ராமசாமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் சங்க தலைவர் ஆறுமுகசாமி வரவேற்றார். லயன்ஸ் பிடிஜி கதிரேசன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். லயன்ஸ் பிடிஜி அருணாச்சலம் லயன்ஸ்கிளப் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். தூத்துக்குடி லயன்ஸ் கிளப் சங்க தலைவராக டாக்டர் பொன்சீலனும், செயலாளராக மனோகரனும், பொருளாளராக பாஸ்கரனும், லயனஸ் மகளிர் கிளப் தலைவராக சகாயதா மச்சோடாவும், செயலாளராக கீதாரமேஷூம், பொருளாளராக உமா ஆறுமுகசாமியும், இளம் லீயோ கிளப் தலைவராக அபிஷேக் பெஞ்சமினும், செயலாளராக கிம்பர்லின் கோலினும், பொருளாளராக அக்ஷயாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து புதிய தலைவராக பொறுப்பேற்று கொண்ட டாக்டர் பொன்சீலன் பேசும் போது, நடப்பாண்டில் மருத்துவ சேவை மற்றும் கல்வி சேவை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சேவைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். முன்னதாக குத்துவிளக்கினை அனிட்டா பொன்சீலன் பங்கஜம் அருணாச்சலம், சகாயதா மச்சோடா, கீதா ரமேஷ், உமா ஆறுமுகசாமி ஆகியோர் ஏற்றி வைத்தனர். விழாவில் பிளஸ் 2, பத்தாம்வகுப்பு தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு அபி கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் நிர்வாக இயக்குநர் ஜெகனாதன், இயக்குநர் அரவிந்த் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் ரேங்க் எடுத்த மாணவிக்கு தலா ரூ.10 ஆயிரமும், மெட்ரிக் தேர்வில் மாநில அளவில் ரேங்க் எடுத்த மாணவிக்கு ரூ.10 ஆயிரமும், மாவட்ட அளவில் ரேங்க் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.65 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் கில்பர்ன் கெமிக்கல்ஸ் நிறுவன பொது மேலாளர் சுரேஷ் ஞானராஜா, இந்து பாரத் பவர் நிறுவன உதவி தலைவர் மயில்வேல், ராஜ்குமார், தங்கசீலன், டாக்டர் சுப்பிரமணியம், ஆர்எம்ஓ., சைலஸ் ஜெபமணி, டாக்டர் சரவணன் உட்பட 15 பேர் லயன்ஸ் கிளப் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழாவில் மில்லர்புரம் சேகரகுரு தேவசகாயம், ஸ்பிக்நகர் சேகர குரு ஜெயசிங், எஸ்டிஆர் குரூப்ஸ் நிறுவனர் தர்மராஜ், துறைமுக பொறுப்புகழக உறுப்பினர் எஸ்டிஆர் விஜயசீலன், தொழில் அதிபர்கள்சத்யா ஜான்சன், ராஜேந்திரன், தெய்வநாயகம், பீட்டர் ஜெபராஜ், வேலாயுதம், சூரிய மூர்த்தி, அசோகன், ராஜசீலன், சுரேஷ், சித்திரைவேல், ராஜாஸ்டாலின், ராமர், ஜெயச்சந்திரன், கவுன்சிலர் சந்திரபோஸ்,செல்லசாமி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிஎஸ்டிஎஸ் உதயசங்கர், முத்துமணி, ஜோபிரகாஷ், டிஎம்பி செல்வன், ராஜதுரை உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். விழாவில் லயன்ஸ் தில்லை, சிதம்பரம், லட்சுமி சிதம்பரம், ஜேர்க்கின்ராய் ஆகியோர் பேசினர். லயன்ஸ் கிளப் சங்க செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us