/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை :
/
புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை :
ADDED : ஜூலை 12, 2011 12:25 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த அன்றே புதுப்பெண் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் ராம்குமார், இவருக்கும் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் மகள் வள்ளியம்மாள் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிச்சயம் செய்த படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் மறுவீட்டிற்காக மாப்பிள்ளை வீட்டிற்கு மணமக்கள் சென்றுவந்தனர். நேற்று முன் இரவுமாலை மணமகள் வீட்டிற்கு வந்த தம்பதிகளுக்கு அங்கு முதலிரவுக்கான வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்தபிறகு கணவன் மனைவி இருவரையும் முதலிரவு அறைக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர். உள்ளே சென்றதும் மணமகள் வள்ளியம்மாள் தலைவலி அதிகமாக இருக்கிறது என்று கணவர் ராம்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவர் ராம்குமார் தலையிலும் கழுத்திலும் மாலைகள் அதிகமாக போடப்பட்டதால் தலைவலிக்கும், உனக்கு ஓய்வு தேவை என்றால் உனது அம்மாவுடன் போய் படுத்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து வள்ளியம்மாள் தன் தாயுடன் சென்று படுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலையில் வள்ளியம்மாள் வாயில் நுரைதள்ளியபடி முனங்கிக்கொண்டு படுத்திருந்தாகப் கூறப்படுகிறது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த கணவர் ராம்குமார் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேள்விப்பட்டதும் சப்கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், ஏஎஸ்பி.,சோனல்சந்திரா, தென்பாகம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.ஆர்டிஓ.விசாரணைக்கு பிறகுதான் புதுப்பெண் சாவுக்கான காரணம் தெரியவரும்.