sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு

/

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு


ADDED : ஜூலை 12, 2011 12:26 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உள்ளாட்சிதேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக உள்ளது.

இதற்காக கடந்த சில நாட்களாக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வார்டுகள் கணக்கெடுப்பு, எல்லைகள் குறித்த விபரங்கள் சேகரிப்பு என்று பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. மறுபுறம் வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தாமல் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு யூனியனிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகள் எடுக்கப்பட்டு ஓரளவு சேதமடைந்த வாக்குப்பெட்டிகளை சீரமைக்கும்பணி நடந்துவருகிறது. தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் பழுதுபார்க்கும் பணிநடந்துவருகிறது. இதில் மொத்தம் ஆயிரத்து362 பெட்டிகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு பெட்டியாக சீரமைக்கும் பணிநடந்துவருகிறது. இன்னும் சில நாட்களில் அனைத்து வாக்குப்பெட்டிகளும் சீரமைக்கப்பட்டுவிடும் என்று யூனியன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.








      Dinamalar
      Follow us