sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

/

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா


ADDED : ஜூலை 14, 2011 12:45 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி : மாற்று திறனாளிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை அழைத்து கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாற்றுதிறனாளிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.கோவில்பட்டி பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை மாற்றுதிறனாளிகள் அதிகமானோர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; மாற்றுதிறனாளிகளை குறைந்தப்பட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கலெக்டர் அழைத்து பேசி ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களுடைய குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு உடனடி கோரிக்கைகளை கலெக்டரிடம் சொல்லி நிவ ர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.



அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ ஆலோசனை குழுவில் மாற்றுதிறனாளிகளுக்கு சமூக சேவை செய்து வரும் மாற்றுதிறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு அடை யாள அட்டை 45 நாட்களுக்கு மேலாகியும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அடை யாள அட்டையை 20 நாட்களுக்குள் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். கோரி க்கை சம்பந்தமாக தர்ணா போராட்டம் நடத்தினர். கணேஷ்ராஜா தலைமை வகித்தார். ராமமூர்த்தி, முருகன், செல்வம், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us