/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக்கை மோதவிட்டு ஆசிரியையிடம் செயின்பறிப்பு
/
பைக்கை மோதவிட்டு ஆசிரியையிடம் செயின்பறிப்பு
ADDED : ஜூலை 14, 2011 12:45 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பைக்கை மோதவிட்டு ஆசிரியையிடம் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்செயினை பறித்துசென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி மகள் அனிதா (24).
இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளிஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் சம்பவதன்று வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது தருவைக்குளம் அரசு குடியிருப்பு அருகே வரும்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அனிதா சென்ற பைக் மீது மோதி கீழே தள்ளினர்.
இதில் நிலைதடுமாறி அனிதா கீழே விழுந்தவுடன் பைக்கில் வந்த மர்ம ஆசாமியில் ஒருவன் அனிதா அணிந்திருந்த தங்கச்செயினை பறித்துள்ளான். பின்னர் மின்னல்வேகத்தில் பைக்கில் ஏறி இரண்டு ஆசாமிகளும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அனிதா தாளமுத்துநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் பைக் கொள்ளையர்களை போலீசார் வலை வீசிதேடிருவகின்றனர்.

