/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குரும்பூரில் வரும் 17ல் விவசாயிகள் சாலைமறியல்
/
குரும்பூரில் வரும் 17ல் விவசாயிகள் சாலைமறியல்
ADDED : ஜூலை 15, 2011 03:25 AM
குரும்பூர்:குரும்பூர் வட்டாரத்தில் வாடும் நெர்பயிர்களை காப்பாற்ற அனைத்து
குளங்களுக்கும் உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டி வரும் 17ம் தேதி விவசாயிகள்
சார்பில் சாலை மறியல் நடக்கிறது.திருச்செந்தூர் தாலுகா தமிழ்நாடு
விசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் நடேச ஆதித்தன், செயலாளர் ராஜா, பொருளாளர்
ஜெகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்
கூறியிருப்பதாவது, குரும்பூர் வட்டாரத்தில் உள்ள கடம்பாகுளம் மற்றும் அதன்
கீழ் உள்ள குளங்களில் தண்ணீர் இல்லை.
அதனால் இதன்மூலம் பாசனம் பெறும் நெல்
விவசாய நிலங்கள் வறட்சியாகி விட்டது. பயிர்கள் கருகி அழிந் து வருகிறது.
கருகிய பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். வாடும் பயிர்களை
காப்பா ற்ற உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும். இத னை வலியுறுத்தி வரும் 17ம்
தேதி காலை 10 மணிக்கு குரும்பூர் பஜாரில் சாலை மறியல் போராட்டம்
நடத்தப்படும். இவ்வா று மனுவில் கூறப்பட்டிருந்தது.