/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆதிச்சநல்லுார் மியூசியத்தை மேம்படுத்த அமெரிக்க இன்ஜினியர் கோரிக்கை
/
ஆதிச்சநல்லுார் மியூசியத்தை மேம்படுத்த அமெரிக்க இன்ஜினியர் கோரிக்கை
ஆதிச்சநல்லுார் மியூசியத்தை மேம்படுத்த அமெரிக்க இன்ஜினியர் கோரிக்கை
ஆதிச்சநல்லுார் மியூசியத்தை மேம்படுத்த அமெரிக்க இன்ஜினியர் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2024 08:11 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் கடந்த150 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்தது. சுமார் 2,600 ஆண்டுகள் மனித எலும்புகூடுகள், சுடுமண் பொருட்கள், முதுமக்கள் தாழி, இரும்பு பொருட்கள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தன.
இதையடுத்து, இந்தியாவின் முதல் முதல் சைட் மியூசியம் ஆதிச்சநல்லுாரில் அமைக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சுற்று பயணம் வந்த விருதுநகர் மாவட்டம், சொக்கநாதன்புதுாரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரமேஷ் ரத்தினகுமார் தன் குடும்பத்துடன் ஆதிச்சநல்லுார் சைட் மியூசியத்தை நேற்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, இன்ஜினியர் ரமேஷ் ரத்தினகுமார் கூறியதாவது:
இந்தியாவின் முதல் சைட் மியூசியம் ஆதிச்சநல்லுாரில் உள்ளது தமிழர்களுக்கு பெருமை. இந்த மியூசியத்தில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் சீர் செய்யப்படாமல் உள்ளது. பார்வையாளர்கள் குழிக்குள் விழுந்து விடாமல் இருக்கவும் நடவடிக்கை இல்லை. ஆதிச்சநல்லுார் மியூசியத்துக்கு கூடுதல் நிதியை மத்திய நிதி அமைச்சர் ஓதுக்கீடு செய்து மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.