/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?
/
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?
துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு?
UPDATED : ஜூலை 03, 2024 03:24 AM
ADDED : ஜூலை 03, 2024 02:09 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக பகுதியில், 1,050 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையம் உள்ளது. 30 ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் இந்த நிலையத்தில் அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் பணிகள் நடக்கின்றன.
பாய்லர் பஞ்சர், கடல்நீர் அனல்மின் நிலையத்துக்குள் புகாமல் இருக்க சுற்றுச்சுவர் கட்டுவது, கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில், அரசின் விதிமுறைகளை மீறி, 'டெண்டர்' இறுதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், டெண்டர்களில் போட்டியாளர்களை பங்கேற்க செய்யாமல் பெயரளவுக்கு இரண்டு நிறுவனங்களை மட்டுமே பங்கேற்க வைத்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கி அதிகாரிகள் அதிக லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, சிவில் ஒப்பந்ததாரர்கள் சிலர், அனல்மின் நிலைய தலைமை பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024 ஜூன் 28ல் நடந்த பராமரிப்பு பணிக்கான சிவில் டெண்டரில், ஒரு ஒப்பந்ததாரரின் டெண்டரை அவசர கதியில் தேர்வு செய்துள்ளனர். அந்த ஒப்பந்ததாரருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை.
போட்டியாளர்களே இல்லாமல், ஆண்டு பராமரிப்பு வேலைகளை முடித்து, அதிகாரிகள் சுயலாபம் அடைந்து விடுகின்றனர். இதனால், அனல் மின்நிலையத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும், ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்கான டெண்டர்கள் அனைத்திலும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்க செய்கின்றனர். அவர்களில் ஒருவருக்கு பெயரளவுக்கு 1,000 ரூபாய் குறைத்து பணி ஆணை வழங்குகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.