/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி இரட்டை கொலை தேடப்பட்டவர் 'சுட்டு' பிடிப்பு
/
துாத்துக்குடி இரட்டை கொலை தேடப்பட்டவர் 'சுட்டு' பிடிப்பு
துாத்துக்குடி இரட்டை கொலை தேடப்பட்டவர் 'சுட்டு' பிடிப்பு
துாத்துக்குடி இரட்டை கொலை தேடப்பட்டவர் 'சுட்டு' பிடிப்பு
ADDED : மார் 07, 2025 01:08 AM

துாத்துக்குடி:தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேலநம்பிபுரத்தை சேர்ந்த சீதாலட்சுமி, 75, அவரது மகள் ராம ஜெயந்தி, 45, வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 3ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகள் கொள்ளைஅடிக்கப்பட்டன.
கொலை தொடர்பாக, தாப்பாத்தி கிராமம் வேல்முருகன், 19, மேலநம்பிபுரம் மகேஷ் கண்ணன், 25, ஆகியோரை எட்டையபுரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த மேலநம்பிபுரம் முனீஸ்வரன், 25, அயன் வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
முனீஸ்வரனை போலீசார் நேற்று அதிகாலை சுற்றிவளைத்தனர். குளத்துார் எஸ்.ஐ., முத்துராஜா மற்றும் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு முனீஸ்வரன் தப்பியோட முயன்ற போது, போலீசார் துப்பாக்கியால் இடது காலில் சுட்டு அவரை பிடித்தனர்.
காயமடைந்த முனீஸ்வரன், எஸ்.ஐ., முத்துராஜா மற்றும் போலீசார் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் போலீசாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த கொலை வழக்கில், 10 தனிப்படைகள், 48 மணி நேர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான முனீஸ்வரனை கைதுசெய்து, நகை, பணத்தையும் மீட்டுள்ளன.