/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டூவீலர்-வேன் மோதல்: போலீஸ்காரர் பலி
/
டூவீலர்-வேன் மோதல்: போலீஸ்காரர் பலி
ADDED : ஆக 12, 2024 12:32 AM
தூத்துக்குடி: ஆத்தூர் அருகே டூ வீலர் மீது வேன் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.
தூத்துக்குடி முள்ளக்காடு சவேரியார் புரத்தை சேர்ந்தவர் ஜேசு ஆல்வின் ராஜா 28. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். பணிக்காக நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் வீட்டில் இருந்து டூவீலரில் ஆத்தூர் நோக்கி சென்றார்.
தூத்துக்குடி - -திருச்செந்தூர் சாலையில் முக்காணியில் எதிரே வந்த இறால் கம்பெனி பணியாளர்கள் வேன் டூவீலர் மீது மோதியது. இதில் ஜேசு ஆல்வின் ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வேன் டிரைவர் மூலைக்கரைப்பட்டி மணிகண்டனை 25, ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

