/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'
/
மறியல் செய்த 12 பேருக்கு 'கம்பி'
ADDED : அக் 24, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: பஸ் வசதி கேட்டு, மறியலில் ஈடுபட்ட, 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
துாத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொட்டலுாரணியில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என, நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர் .
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 115 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், 103 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன், 51, சண்முகம், 34, ஆறுமுகவெங்கட நாராயணன், 38, உட்பட, 12 பேர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

