ADDED : செப் 12, 2026 11:13 PM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: 'எக்னாமிக்ஸ் டைம்ஸ்' நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும், 'இ.டி., இன்ப்ரா குளோபல் போர்ட்ஸ் அண்டு ஷிப்பிங் அவார்ட்ஸ்' என்ற பெயரில், நாட்டில் உள்ள துறைமுகங்களில் சிறப்பாக செயல்படும் துறைமுகங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டின் பசுமைத் துறைமுகம், சிறந்த நவீனத் துறைமுகம் மற்றும் மின்மய மாற்றத் திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டன.
மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், எக்னாமிக்ஸ் டைம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் மனோஜியிடம் இருந்து, துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் விருதுகளை பெற்றுக்கொண்டார்.
