/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நாய்கள் குதறியதில் 25 ஆடுகள் பலி
/
நாய்கள் குதறியதில் 25 ஆடுகள் பலி
ADDED : ஜூலை 05, 2025 08:22 PM

துாத்துக்குடி:தெரு நாய்கள் கடித்து, 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம், விவசாயி குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தஞ்சைநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுவேல், 45; விவசாயி. இவர், தன் தோட்டத்தில் 39 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி ஒருவர், செம்மறி ஆடுகளை, நாய்கள் கடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, சாமுவேலுக்கு தெரிவித்தார்.
உடன், தோட்டத்திற்கு சென்ற சாமுவேல், நாய்களை விரட்டினார். இருப்பினும், 25 ஆடுகள் இறந்த நிலையில் கிடந்தன; 14 ஆடுகள் படுகாயமடைந்து துடிதுடித்தன.
காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். ஒரே நாளில் 25 ஆடுகளை இழந்த சாமுவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க, சாமுவேல் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

