/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி பலி
/
கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி பலி
கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி பலி
கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி பலி
ADDED : டிச 26, 2025 02:49 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திரு ச்செந்துார் அருகே வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த பெண்கள் பலர், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று பாதயாத்திரையாக சென்றனர்.
துாத்துக்குடி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், குறுக்குசாலை அருகே அவர்கள் நேற்று மாலை, 4:00 மணியளவில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திருச்செந்துாரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த இன்னோவா கார், திடீரென பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில், வீரபாண்டியன்பட்டினம், செந்தில்வீதியை சேர்ந்த இசக்கியம்மாள், 55, சுந்தரராணி, 60, கரம்பவிளையை சேர்ந்த கஸ்துாரி, 55, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச் சென்ற தஞ்சாவூர் வடக்கு வாசலை சேர்ந்த ராம்பிரசாத், 32, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.