/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு 4 பேர் கைது
/
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு 4 பேர் கைது
ADDED : அக் 29, 2024 03:38 AM
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 27, என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் எப்போதும்வென்றான் போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.
அங்கு, அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக வெடிமருந்து பொருட்களை வாங்கி பட்டாசுகள் தயாரிப்பது தெரிந்தது.
அங்கிருந்த, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி, 38, சதீஷ்குமார், 27, மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார், 29, கோழிப்பண்ணை உரிமையாளர் கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பட்டாசுகள் தயாரிக்க வெடி பொருட்களையும், பட்டாசுகளையும், ஒரு மினி சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

