/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
4,800 மீ., காப்பர் ஒயர் திருட்டு கல்லுாரி மாணவர்கள் கைது
/
4,800 மீ., காப்பர் ஒயர் திருட்டு கல்லுாரி மாணவர்கள் கைது
4,800 மீ., காப்பர் ஒயர் திருட்டு கல்லுாரி மாணவர்கள் கைது
4,800 மீ., காப்பர் ஒயர் திருட்டு கல்லுாரி மாணவர்கள் கைது
ADDED : அக் 02, 2024 02:18 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புதியம்புத்துார் பகுதியில் ஏராளமான சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
அங்குள்ள வாரி ரினிவபெள் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற சோலார் மின் உற்பத்தி நிறுவனத்தில் இருந்த, 4,800 மீட்டர் காப்பர் ஒயர் திருடப்பட்டது.
திருட்டில் ஈடுபட்டதாக புதியம்புத்துார் மேலமடை அசோக்குமார், 19, தெற்கு காலனி தினேஷ்குமார், 19, சம்படி காலனி தீபக், 20, ஆர்.சி., தெரு அஜய் ராஜதுரை, 20, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து இரண்டு டூ - வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் அசோக்குமார் ஐ.டி.ஐ., படிக்கிறார். மீதமுள்ள மூவரும் துாத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படிக்கின்றனர்.