/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை
/
பைக்கில் கடத்தி சென்று வாலிபர் கொலை
ADDED : நவ 07, 2025 01:54 AM
துாத்துக்குடி: பைக்கில் கடத்தி சென்று, வாலிபரை வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் தேடுகின்றனர்.
துாத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்தவர் அஜய், 21. இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்நிலையில், அஜயை நேற்று இரவு, இருவர் பைக்கில் பசும்பொன் நகர் அருகே கடத்தி சென்றனர்.
பின், அவரது சட்டையை கழற்றி தாக்கியதில், தப்பியோடிய அஜயை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின், இருவரும் அதே பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.
அஜயின் சகோதரி ஒருவர், சில நாட்களுக்கு முன் காதலனுடன் மாயமாகினார். அவர்களை அஜய் தேடி வந்த நிலையில், காதல் தகராறில் சமரசம் பேச அழைத்து கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் சிப்காட் போலீசார் விசாரிக்கின்ற னர்.

