/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி -- சென்னை கூடுதல் விமான சேவை
/
துாத்துக்குடி -- சென்னை கூடுதல் விமான சேவை
ADDED : மார் 31, 2025 01:18 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி -- சென்னை இடையே தினமும் இருமுறை இயக்கப்படும் 'ஸ்பைஸ் ஜெட்' விமான சேவை நேற்று துவங்கியது.
துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் நான்கு முறை, பெங்களூருக்கு ஒரு முறை 'இண்டிகோ' விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சேவையை, 2021ல் அந்நிறுவனம் நிறுத்தியது.
தற்போது, பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் துாத்துக்குடி -- சென்னை இடையே இருமுறை, பெங்களூருக்கு ஒருமுறை விமான சேவையை அந்நிறுவனம் நேற்று துவங்கியது.
துாத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் இருபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானம் சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு தினமும் காலை 6:00 மணிக்கும், மதியம், 2:20 மணிக்கும் புறப்படும். துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மதியம், 12:10 மணி, மாலை, 4:55 மணிக்கு புறப்படும்.
துாத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு தினமும் காலை, 8:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானம், அங்கிருந்து, 9:55 மணிக்கு புறப்பட்டு காலை 11:45 மணிக்கு துாத்துக்குடி திரும்பும்.