/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அங்கீகாரமற்ற ஐ.டி., வாயிலாக ரயில் டிக்கெட் விற்றவர் கைது
/
அங்கீகாரமற்ற ஐ.டி., வாயிலாக ரயில் டிக்கெட் விற்றவர் கைது
அங்கீகாரமற்ற ஐ.டி., வாயிலாக ரயில் டிக்கெட் விற்றவர் கைது
அங்கீகாரமற்ற ஐ.டி., வாயிலாக ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ADDED : ஜூலை 01, 2024 01:18 PM
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம் மணியாச்சி மேற்கு காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன், 59. இவர், கோவில்பட்டி மில் கேட் ரோட்டில் துளசி கம்ப்யூடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
இங்கு, அங்கீகாரம் இல்லாமல் ரயில்வே டிக்கெட் புக் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தனிப்பட்ட பயனர் ஐ.டி., யில் பதிவு செய்யப்பட்ட 10,980 ரூபாய் மதிப்புள்ள நான்கு நேரடி இ - டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், 'அங்கீகரிக்கப்படாத பயனர் ஐ.டி., களைப் பயன்படுத்தி, முன்பதிவு டிக்கெட்டுகளை மகேஸ்வரன் வாடிக்கையாளர்களுக்கு பணப் பலன்களுக்காக விற்பனை செய்துள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.