/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி
/
அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி
ADDED : நவ 17, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் பணியின்போது அசாம் மாநில தொழிலாளி, தவறி விழுந்து உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதிய அனல்மின் நிலையத்தில், முதல் யூனிட் கொதிகலனை, சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் சிலர் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னா குர்மி, 37, என்பவர் திடீரென தவறி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், முன்னா குர்மி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

