/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
/
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
ADDED : அக் 03, 2025 03:10 AM

துாத்துக்குடி: சென்னையில் தலைமை காவலராக பணிபுரிந்தவர், சொந்த ஊரான கோவில்பட்டியில் தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, லட்சுமி மில் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ், 36; சென்னை, வளசரவாக்கம் காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்தார்.
சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமி, 30, என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர். மகாலட்சுமி சிவகாசியில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், அங்கு சென்ற விக்னேஷ், குழந்தைகளை பார்க்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சிவகாசி நகர காவல் நிலையத்தில் மகாலட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். அவர், சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
ஜாமினில் வந்த விக்னேஷ் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், குழந்தைகளை பார்க்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி மேற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசா ரிக்கின்றனர்.