/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நிலக்கரி லாரி தீக்கிரை டிரைவர், கிளீனர் தப்பினர்
/
நிலக்கரி லாரி தீக்கிரை டிரைவர், கிளீனர் தப்பினர்
ADDED : பிப் 23, 2024 02:49 AM

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சிவகாசிக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது. டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
துாத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமான டாரஸ் லாரி நேற்று முன்தினம் இரவு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சிவகாசி தனியார் பேப்பர் அட்டை கம்பெனிக்கு புறப்பட்டது. மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் லாரியை ஓட்டினார். ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த முருகேசன் கிளீனராக சென்றார்.
நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி அருகே திட்டங்குளம் சென்ற போது லாரி ரோடு நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் லாரி தீப்பற்றி முழுதும் தீக்கிரையானது. கோவில்பட்டி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். நிலக்கரியும் தீயில் நாசமாயின. டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.