/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
52 கிராம் நகையை போலீசிடம் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
/
52 கிராம் நகையை போலீசிடம் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
52 கிராம் நகையை போலீசிடம் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
52 கிராம் நகையை போலீசிடம் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
UPDATED : அக் 30, 2025 07:09 AM
ADDED : அக் 30, 2025 03:31 AM

துாத்துக்குடி:அனாதையாக கிடந்த, 52 கிராம் தங்க நகையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு தொழிலாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், 32 மற்றும் குமார், 35, தனியார் நிறுவன பணியாளர்கள். வேலை நிமித்தமாக, இருவரும், உடன்குடி கீழ பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். சாலையோரத்தில் அனாதையாக கிடைந்த ஒரு பர்சை எடுத்து பார்த்தனர். அதன் உள்ளே தங்க கட்டிகள் மற்றும் தங்கச் செயின் இருந்தது.
உடனடியாக, குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு அந்த பர்சை எடுத்து சென்றனர். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன் முன்னிலையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நகைகளை போலீசார் சோதித்து பார்த்ததில், 36 கிராம் எடை கொண்ட சிறிய தங்க கட்டிகளும், 16 கிராம் எடை கொண்ட தங்க செயினும் இருந்தது. 52 எடை கொண்ட அதன் மதிப்பு, 6.5 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
நகைகளை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கரன், அவற்றை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த இருவரையும் சால்வை அணிவித்து பாராட்டினார்.

